பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக இலங்கை தமிழர் ஒருவருக்கு கிடைத்த உயரிய கௌரவம்!
இலங்கையில் பிறந்து விருது பெற்ற பிரெஞ்சு பேக்கரி தயாரிப்பாளரான தர்ஷன் செல்வராஜ், பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பிரான்ஸில் வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன் தொடக்கமாக ஏறக்குறைய 10,000 விஐபிக்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக் கொண்டு நாடு முழுவதும் கொண்டுச் செல்வார்கள்.
அந்தவகையில் இம்முறை நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் ஒரு தமிழர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லவுள்ளார். இது வரலாற்றில் முதல் முறையாக கருதப்படுகிறது.
தர்ஷன் செல்வராஜ் இலங்கையில் இருந்து கடந்த 2003 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து பிரான்ஸிற்கு சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்ற சிறந்த பேக்கரி உற்பத்தியாளர் போட்டியில் கலந்துகொண்டு விருதை பெற்றார். இதனையடுத்து அவர் உற்பத்தி செய்யும் பாண் பிரான்ஸ் அதிபர் மாளிகையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வாறாக தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட இவர் தற்போது ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய முதல் தமிழர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.