அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்! நேற்று 171 பேர் பலி

Prathees
4 years ago
அதிகரிக்கும் கோவிட்  மரணங்கள்! நேற்று 171 பேர் பலி

கோவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,  கோவிட் தொற்றுக்கு உள்ளாகி  6,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும்  3,555 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 2,325 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 314,507 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 45,026 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4