உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றிய ரஷ்யா

#Russia #Ukraine #War #Lanka4 #Putin #Zelensky #L4
Prasu
1 hour ago
உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றிய ரஷ்யா

கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களது படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ், அதிபர் புதினிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். 

இதனை ஒரு "முக்கிய உத்திசார் வெற்றி" என புதின் பாராட்டினார். ஆனால், ரஷியாவின் இந்த வெற்றிக் கூச்சலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அடியோடு மறுத்துள்ளார். 

"இது ரஷியாவின் அப்பட்டமான பொய், அந்த நகரம் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தால், புதின் அங்கு வந்து என்னைச் சந்திக்கத் தயாரா? உண்மை நிலை முற்றிலும் வேறானது" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி டிரம்பை ஏமாற்றவே புதின் இந்த உலக மகா பொய்யைக் கூறுகிறார் என்றும் அவர் குற்றச்சாட்டினார்.என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4