நடிகை மர்லின் மன்றோ வாழ்க்கை வரலாறு
மர்லின் மன்றோவுக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை என்ற பெருமை இன்று வரை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை. அவருடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடிஸ்வரர்கள் தவம் கிடந்திருக்கிறார்கள்.
மர்லின் மன்றோ 1926 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மரிலின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார். அவர் பிறந்த போது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.
வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்நதும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஆனால் அங்கும் துன்பம் தான் தொடர்ந்தது. கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16 ஆவது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.
அவருடன் வேலை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதால், ஒரு வருடத்தில் விவாகரத்து செய்தார்.
அதன் பின்பு விமான கம்பனியில் பரசூட் திருத்தும் பணியில் வேலை செய்தார். அதன் பின்னர் படம் வரைவதற்கு மொடல் பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்கு கூட லாயக்கு இல்லை என்று அவரை விரட்டிவிட்டார்கள்.
கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பின்னர் நடிப்பு ஆசையால் ஹாலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார்.
வாடகை பணம் கொடுக்காததால் தங்கியிருந்த விட்டை விரட்டவே, கலண்டர் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து 250 ரூபாய் வருமானம் பெற்றார்.
பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தை பார்த்து விட்டு அவரை அழைத்தார்கள் படக் கம்பெனிகாரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக்கிடைத்த வார்த்தை ஒரே ஒரு வார்த்தை. அதுவும் படம் வெளிவர வெட்டுப்பட்டுவிட்டது. ஆனாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் மர்லின். மர்லின் மன்றோ ரசிகர்களால் பின்னர் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.
மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பனி வருடத்திற்கு 55 இலட்சம் ரூபா வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.
இவரது சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. மர்லின் மூன்று முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்து விட்டார்.
மூன்றாவது கணவருடன் வாழும் போது அவருக்கு இருதடவை கருச்சிதைவு ஏற்பட்டது. தாயாகும் வாய்ப்பு கிட்டவில்லை.
ஆங்கிலப் பட உலகின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. வைத்தியர்களின் சிகிச்சை அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தது. அதன்பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்தார்.
மர்லின் மன்றோ கடைசியாக நடித்த படத்தில் குளி்க்கும் காட்சியில் அவர் நிரிவாணமாக நடித்தார்.
இந்த நிலையில் 5-8-1962 இல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார். அமெரி்க்கா சினிமா நகரமான ஹாலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிகிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு வைத்தியர்களுக்கு தகவல் கொடுத்தார்.
வைத்தியர்கள் வந்து சோதித்து பார்த்த போது அவர் அளவுக்கு மீறி துாக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக கூறினார்கள். காரணம் ஏதும் அவர் எழுதி வைக்கவோ தெரிவி்க்கவோ இல்லை. அப்போது அவருக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்தவராக திகழ்ந்த அவரை இன்னமும் எந்த நடிகையும் எட்டவில்லை!