ஆப்கன் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் - ஜி7 நாடுகள் வேண்டுகோள்

Keerthi
4 years ago
ஆப்கன் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் - ஜி7 நாடுகள் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தலிபான்களால் உடலுக்கும், உரிமைக்கும் பேராபத்து விளையும் என அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
இதற்கிடையே, ஆப்கனில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தலிபான்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 21 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
இந்நிலையில், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 நாடுகள் அமைப்பு சார்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தலிபான்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4