அமெரிக்க சுதந்திர தினத்தன்று நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் காயம்
#Hospital
#America
#Independence
#Lanka4
#GunShoot
#L4
Prasu
1 hour ago
நியூயார்க்கின் கோனி ஐலண்ட் கடற்கரைக்கு அருகில், நடைபெற்ற விருந்து ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 21 வயதுப் பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளார், மற்றவர்கள் நிலைமை சீராக இருப்பதாக காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் குறிப்பிட்டுள்ளார்.
விருந்துக்காக ஒரு குடும்பம் கூடியிருந்த முற்றத்தில், கருப்பு முகமூடி அணிந்த ஒரு சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நான்கு குழந்தைகளின் வயதுகள் 6, 7, 12 மற்றும் 14 ஆகும் என்று ஜெசிகா டிஷ் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே