வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை

#Vavuniya #Death #Covid 19
Prathees
4 years ago
வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை

வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்ய  முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றி  வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி  மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4