சுவிற்சலாந்து மக்களில் பெரும்பாலானோர் மின்சார காரை விரும்பவில்லை!

சுவிற்சலாந்து மக்களில் பெரும்பாலானோர் மின்சார காரை விரும்பவில்லை!

சுவிஸில் மேற்கொண்ட ஆய்வில் 73வீதமானவர்கள் மின்சாரக்காரினை வாங்குவதில் அக்கறை காட்டவில்லை.

உலகில் பல அரசாங்கங்கள் தம் நாட்டு சாலை போக்குவரத்திற்கு பெற்றோலிய எரிபொருட்களை விட மின்சாரத்தினால் இயங்கும் வாகானங்களையே சூற்றாடல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பயன்படுத்த விரும்புகிறது. எதிர்காலத்தில் இதை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சித்தாலும் மக்கள் இதற்கான விருப்பத்தை கொண்டிருக்கிறார்களா?

இணைய வழி ஆய்வொன்றில் 1150 சுவிற்சலாந்து வாசிகளில் 3.2வீதமானனோர் ஏற்கனவே மின்சார காரினை வைத்துள்ளனர். 24.2வீதமானனோர் வாங்க உத்தேசித்துள்ளனர். 72.6வீதமானோர் வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை.

சுவிற்சலாந்தில் ஜெர்மன் பேசுவோர் (74.7வீதம்) மற்றும் பிரெஞ் பேசுவோர் (72.6வீதம்) மின்சார காரினை வாங்க இணங்கியுள்ளனர். இத்தாலிய மொழி பேசுவோர் (61.3வீதம்) இதனை வாங்க விரும்பவில்லை.

இந்த மின்சார காரினை வாங்க விரும்பாமைக்கு காரணம் இதன் மின்கலங்களினால் ஏற்படும் சூழல் பாதிப்பு மற்றும் போதிய நிலையங்கள் இவற்றை வாங்க, மீள்நிரப்புதல் செய்ய இன்மையேயாகும்.

பெரும்பாலானோர் இந்த மின்சாரத்திற்கு பதிலாக பெற்றோல், ஹய்பிரட் மற்றும் டீசல் வாகனங்களையே விரும்புகின்றனர்.

மேலும் இந்த கார்களை பயன்படுத்தும் போது அதிகளவு நிலக்கரி மின்சாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய நெட்வொர்க் ஆஃப் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்களுடன் (ENTSOE) இணைக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும்பாலான மின்சாரம் நிலக்கரியிலருந்தே பெறப்படுகிறது.

எனினும் சிறிய ரக மின்சார கார்கள் பெரிய மற்றைய கார்களை விட சிறந்தது. அதேவேளை சிறிய எரிபொருள் கார்கள். பெரிய மின்சாரக்கார்களிலும் சிறந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4