அவுஸ்திரேலியாவில் கொவிட் முடக்கநிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவில் கொவிட் முடக்கநிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் மற்றும் சிட்னியில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கொவிட் முடக்கநிலை மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டதை எதிர்த்து களத்தில் குதித்தனர்.

சுமார் 4000 பேர் வரையிலானோர் மெல்பேர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பொலிசார் மிளகு ஸ்பிரே வீசியும், கைது செய்தும் உள்ளனர். 218 பேர் கைது செய்யப்பட்ட வேளை 7 பொலிசார் காயங்களுக்குள்ளானார்கள்.

சிட்னியில் 1000 பொலிசாருக்கு 250 ஆர்ப்பாட்டக்காரருமாக, பிரிஸ்பேர்னில் 2000 ஆர்ப்பாட்டக்காரர்களும் கலக மனப்பான்மையுடன் பிரசன்னமாயிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 5452 அவுஸ்திரேலிய டொலர்கள் தண்டம் அறவிடப்பட்டுள்ளனர்.

மேலும் நகரின் உட்பகுதியில் அதிக கொவிட் தாக்கங்கள் உள்ள பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கொவிட் தொற்று எதிர்ப்பு நடவடிக்கையில் உலகில் பெரிதும் பாராட்டப்பட்டும், 978 மரணங்களே அங்கு நிகழ்ந்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4