டெல்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

Keerthi
4 years ago
டெல்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில், டெல்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. 
உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்துக் கடைகளையும் இரவு 10 மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள சந்தைகள் 8 மணி வரை செயல்படவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் இந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
டெல்லியில் தளர்வுகள் திரும்ப பெறப்பட்டது வியாபாரிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4