வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமையல் வல்லுநர் தாமு

#Food #LANKA4 #Social Media #chef #L4 #RUMORS
Prasu
2 hours ago
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமையல் வல்லுநர் தாமு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருக்கும் செஃப் தாமு நிகழ்ச்சியின் ஆரம்ப சீசன் முதல் நடுவராக இருந்து வருகிறார்.

தற்பொழுது குக் வித் கோமாளியின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் தாமு அவர்கள் உடல்நிலை காரணமாக சில சந்தர்ப்பங்களில் பங்கேற்கவில்லை.

கடந்தவாரம் நடந்த அரையிறுதி சுற்றிலும் தாமு அவர்கள் பங்கேற்கவில்லை. அரையிறுதிக்கு வராததால் செஃப் தாமு இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு செஃப் தாமு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், போலி செய்திகளை நம்பாதீங்க. 

காலில் ஊசி போட்டதால் எனக்கு வலி, அதனால் அரசியர்த்தி சுற்றில் பங்கேற்கவில்லை. மேலும் ,இறுதி போட்டியில் பங்கேற்று இருக்கிறேன் என தாமு வீடியோ வெளியிட்டு கூறி இருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4