முச்சக்கரவண்டி விபத்தில் இரு சிறுவர்கள் பலி

#Accident #Police
Prathees
4 years ago
முச்சக்கரவண்டி விபத்தில் இரு சிறுவர்கள் பலி

மொனராகல மாவட்டத்தில் ஹம்பேகமுவ, மைலவெல பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சைக்கு பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 மற்றும் 17 வயதுடைய குறித்த சிறுவர்கள்  கொட்டவெஹெரமன்கட மற்றும் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சடலங்கள் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4