விரைவில் வருகிறது ஐபோன் 13

Nila
4 years ago
விரைவில் வருகிறது ஐபோன் 13

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மொடல்களின் வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், அப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபோன் 13 மினி உட்பட புது ஐபோன் மொடல்கள் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. தற்போதைய ரென்டர்களின் படி ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போன்றே காட்சியளிக்கிறது.

புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் எல்.டி.பி.ஓ. டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், புதிய ஏ15 பயோனிக் சிப்செட், 2406 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், லிடார் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஐபோன் 13 மினி துவக்க விலை 699 டொலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,042 என நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய ஐபோன் 12 மினி மடலும் இதேபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4