இலங்கையில் முதன்முறையாக யானைகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்

Keerthi
4 years ago
இலங்கையில் முதன்முறையாக யானைகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்

நீண்டகாலமாக வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வளர்ப்பு யானைகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை இலங்கை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பயிற்றப்பட்ட யானைகள் செல்வந்தர்கள் மற்றும் பௌத்த விஹாரைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பயிற்றுவிக்கப்பட்ட யானைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் முறைப்படுத்தல் தொடர்பாக 2021 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வௌியிடப்பட்ட முதலாம் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விதிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

1) மிருகமொன்றை பராமரிக்கும் போது அதன் பாகன் போதைப்பொருள் அல்லது மதுபோதையில் இருக்க முடியாது

2) மரபணு (DNA) விபரங்களுடன் கூடிய உயிர்மரபணுவியல் (Biometric) அடையாள அட்டை மற்றும் இடது, வலது புறங்களுடன் நான்கு நிழற்படங்கள், தலை மற்றும் தண்டு மற்றும் பின்புறம் முழு வால் தெரியக்கூடியவாறு.

3) ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல்நலப் பரிசோதனை

4) ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணிநேர வேலை

5) இரவு வேளையில் கடமை இல்லை

6) 60 வயதை அடைந்த பிறகு வேலை வாங்கமுடியாது.

7) நோய்வாய்ப்பட்டால் வரம்பற்ற விடுப்பு

8) ஐந்து வயதிற்குட்பட்ட யானைகளை வேலைக்கு அமர்த்த முடியாது

9) கர்ப்பிணி யானைகளிடம் வேலை வாங்க முடியாது,

10) கர்ப்பிணி யானைகளுக்கு இரண்டு வருட மகப்பேறு விடுப்பு

11) நான்கு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை இழுத்துச் செல்ல முடியாது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4