பாடசாலைகளை மீள திறப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

Keerthi
4 years ago
பாடசாலைகளை மீள திறப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

செப்டெம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு  கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆலோசித்து வருகிறது.

எவ்வாறாயினும் சில வகுப்புகளை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அழைப்பதா அல்லது சுழற்சி முறையில் கட்டம் கட்டமாக வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதா என்பது தொடர்பிலும் கல்வியமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அத்தோடு, பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கல்வியமைச்சு பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4