கொரோனாவிலிருந்து விடுபட சத்தான உணவுகளை உண்ணுமாறு ஆலோசனை

#Covid 19 #Corona Virus
Prathees
4 years ago
கொரோனாவிலிருந்து விடுபட சத்தான உணவுகளை உண்ணுமாறு ஆலோசனை

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைஎடுப்பதுபோல, தினசரி ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் ரணில் ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். 

வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் சீரான உணவைப் பெறுவது அவசியம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட் தொற்றுடன் வீடகளில் வாழும் மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் விநியோகம் இன்று (23) பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்ப காலம் 26 வாரங்களுக்கு மேல் உள்ள தாய்மார்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4