அம்பியூலன்ஸ் வண்டி சாரதி உட்பட 194 பேர் உயிரிழப்பு

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #Death
Nila
4 years ago
அம்பியூலன்ஸ் வண்டி சாரதி உட்பட 194 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (22.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 20 ஆண்களும், 29 பெண்களுமாக 49 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 71 ஆண்களும். 74 பெண்களுமாக 145 பேரென மொத்தமாக 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,560  ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள்முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாளொன்றில் 4000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 22 பேருடன் ஞாயிறன்று 4304 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் 4000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

தற்போது மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்ற டெல்டா பரவல் அச்சுறுத்தலால் சுகாதார கட்டமைப்பும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றிய நபர் கொவிட் தொற்றின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இதே வேளை இன்று இரவு 8.30 மணிவரை 4,353 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய இது வரையில் 394353 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 344 381 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 41 476 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4