சுற்றுலா விசா கட்டணத்தில் மாற்றம்

Prathees
4 years ago
சுற்றுலா விசா கட்டணத்தில் மாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறையில் உள்ள இ-சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் விசா வழங்க அண்மையில் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பின்வரும் விசா கட்டணத்தை வசூலித்து, சம்பந்தப்பட்ட சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 அந்தவகையில், சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் -  70 அமெரிக்க டொலர்,

சார்க் அல்லாத நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் -  85 அமெரிக்க டொலர்,

சிங்கப்பூர், மாலைதீவு மற்றும் சீஷெல்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4