வாழ்வினில் மறக்க முடியாத நிமிடங்கள்

அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி..
குழந்தையை வயிற்றிலும்
என்னை நெஞ்சினிலும் சுமந்தால் அந்த பேதை,,
திங்கள் முகம் அவளின் அழகு முகம்
மாதம் பத்து
அதில் 8 மாதம் நான் அவள் பிள்ளை.
அழகு முகத்தில் அத்தனை சந்தன கைகள் .
அழகாய் நடந்தது வளைக்காப்பு..
பாட்டிகளின் அறிவுரை- அதுவே என் பயம்
மாதம் ஒன்பது
அதிகபட்ச பயமும் அதிகபட்ச சந்தோஷமும்..
தேய்பிறையாய் நாட்கள் நகர
வளர் பிறை பிறக்கும் நாளும் வந்தது,,
60 பேருக்கு அறிவுரை கூறும் நான்
அன்றோ 6 வயது பிள்ளை போல்..
அனுமதிக்கப்பட்டால் என் அன்பு உயிர்.
என் கை பிடித்தவாரே நகர்ந்தாள்,,
ஆறுதலுக்கு அனுப்பினேன்
என் உயிரையும் சேர்த்து.,
பேதை வலியால் துடிக்க
இந்த 6 வயது பிள்ளை நெஞ்சம் தவிக்க..
"அம்மா "" என்று ஒரு சத்தமிட்ட குரல் ..
மயக்கமா? மரணமா ?
கலங்கியது கண்கள் பயத்தால்,,
கதறியது புதிதாய் வந்து உதித்தான் எங்கள் ராஜகுமாரன்...
என் நகங்களோ தரையில்.,
இப்பொழுது நானும் உள்ளே..
திலகமிட்ட நெற்றியில்
தீரா காதல் முத்தம்.,
வளர் பிறை என் கையில்
முழு நிலா என் மடியில் ..
மீண்டும் கண்கள் கலங்கின?
வெளியே பயந்த கணவனாய்..
உள்ளே தத்தளிக்கும் தகப்பனாய்
நீர் இருவரும் வழிய வழிய.



