மங்களவின் இழப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவிப்பு

Nila
4 years ago
மங்களவின் இழப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் தெரிவிப்பு

தான் நம்புகின்ற கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக, பயமின்றி புரட்சிகர முடிவுகளை எடுத்த மங்கள சமரவீர அவ்வாறான  அனைத்துத் தீர்மானங்களின் ஊடாகவும் அவர் நல்லிணக்கத்தைக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றிய ஒருவராவார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இந்நாட்டுக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மங்கள சமரவீர மறைந்துள்ளார்.

அன்னாரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் மங்கள சமரவீரவின் அனைத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

 அழகான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர நண்பரே உங்களுக்கு உன்னதமாக பரிநிர்வாணம் கிட்ட பிரார்த்திக்கின்றேன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4