அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மாரடைப்பால் மரணம்

Keerthi
4 years ago
அமெரிக்காவின் மிக உயரமான மனிதர் மாரடைப்பால் மரணம்

அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி என்பவர் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர். இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் 'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இகோர் கடந்த 20-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அவரது தாயார் ஸ்வெட்லானா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4