இலங்கை வரும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
#SriLanka
#Curfew
#Health
#Tourist
Yuga
4 years ago
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் கூறினார்.
எவ்வாறிருப்பினும் Bio-bubble திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே