சுவிற்சலாந்து நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமை...

சுவிற்சலாந்து நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமை...

சுவிற்சலாந்தின் நான்காம் அலை எம்மை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. என்று பொது சுகாதார அதிகாரி பட்ரிக் மதிஸ் ஆகஸ்ட் 24 தெரிவித்தார். தினமும் சுவிஸில் 2500-300 வரையில் தொற்றுக்கள் உண்டாகின்றன. இது பெரிதும் டெல்டா வைரஸினால் மாத்திரமே எற்படுகிறது. பெரும் பாலும் தடுப்புசி ஏற்றாத 10-29 வயதினரை  கொவிட் தாக்குகிறது. மேலும் வயதானவர்களையும் 10 வயதிற்கு குறைந்தவர்களையும் இது தாக்குகிறது.

சுமார் 720 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வாரத்திலும் 45வீதம் கூடுதலானது.

அரசாங்கம் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தாமலிருக்க பார்க்கும் வேளையில் தடுப்புசி ஏற்றப்பட வேண்டியவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது. அக்டோர் 1 முதல் அரசாங்கம் கொவிட் சான்றிதழுக்கு கட்டணம் செலுத்தாது. மொத்தமாக 9.5 மிலியன் டோஸ்கள் கடந்த மாதம் டிசம்பரில் இருந்து ஆகஸ்ட் 26 வரை ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 26 தொடக்கம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தனிமைப்படுத்தலில் சில நாடுகளுக்கு விதிவிலக்காகும்.

ஜுன் 26 தொடக்கம் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல. 10000 பேர் வரையான பொது நிகழ்வுகள், புங்கா, நடன அமைப்புகள், திறந்துள்ளன. மே 31 தொடக்கம் உள் வெளி உணவுச்சாலைகள் திறந்து வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்த வண்ணம் செய்யலாம், ஆனாலும் முக்கியமல்ல.

இது வரை 10400 சுவிஸ் மக்கள் மொத்தம் 8.6மிலியன் சனத்தொகையில் கொவிட் தொற்று காரணமாக இறந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4