இலங்கையிலிருந்து சுவிஸ் க்கு கொண்டு செல்லப்பட்ட மிகப்பெரிய இரத்தினக்கல்

#SriLanka #Switzerland
Nila
4 years ago
இலங்கையிலிருந்து சுவிஸ் க்கு கொண்டு செல்லப்பட்ட மிகப்பெரிய இரத்தினக்கல்

இரத்தினபுரி, பெல்மடுல்லா பகுதியில் உள்ள தனியார் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினமாக கருதப்படும் அருணோல் மாணிக்கம் பாதுகாப்பாக சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மாணிக்கம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

அருணோல் மாணிக்கம் ஒரு சான்றிதழைப் பெறுவதற்காக சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள இரத்தின ஆய்வகத்தில் மாணிக்கத்தை முழுமையாக பரிசோதித்த பிறகு தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பின்னர் வெளிநாட்டு மாணிக்கம் ஏலத்தில் ரத்தினங்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கொரியர் மூலம் மாணிக்கம் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4