ஆதிவாசி தலைவரின் மனைவிக்கு கோவிட்

#Corona Virus #Covid 19
Prathees
4 years ago
ஆதிவாசி தலைவரின் மனைவிக்கு கோவிட்

தம்பானே ஆதிவாசி தலைவர் ஊருவாரிகே வன்னில அத்தோவின் மனைவி மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றுக்குள்ளான  தனது மனைவி மஹியங்கனை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.

ஆதிவாசிகளின் கிராமமான தம்பானே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 27 ஆம் திகதி  115 பேருக்கு நடத்தப்பட்ட விரைவான அன்டிஜென் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4