ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் இறுதிக் கடமைகளில் பங்கேற்க ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் தெஹ்ரான் விஜயம்!

#world_news #Lanka4 #Iran #funeral #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஈரான் உச்ச தலைவர் கொமேனியின் இறுதிக் கடமைகளில் பங்கேற்க ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் தெஹ்ரான் விஜயம்!

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி அவர்களின் இறுதிக் கடமைகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் ஈரான் சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர். 

அங்கு அவர்களுக்கு ஈரானிய அதிகாரிகளால் அரச மரியாதைகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில், ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ.பசீஹா அஸ்மியும் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் ஈரானின் உச்ச தலைவருக்கு இலங்கையின் சார்பில் தங்களது இறுதி அஞ்சலியையும் இரங்கலையும் செலுத்தவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4