குடு ரேணுவும் மகளும் கைது

#Arrest #Police #Colombo
Prathees
4 years ago
குடு ரேணுவும் மகளும் கைது

ராஜகிரிய பண்டாரநாயக்கபுரத்தில் பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள் ஆகியோரை வெலிக்கடை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகளிடமிருந்த  312 பாக்கெட் போதைப்பொருட்களை பொலிஸார்,   கைப்பற்றியுள்ளனர்.

தனது தாயார் ஹெரோயின் பக்கெட்டுகளை தனக்கு விற்பனைக்காக கொடுத்ததாக குறித்த யுவதி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாய் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த பொலிசார் அவரிடம் இருந்த 5000 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தாய், குடு ரேணு என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாய் மற்றும் மகள் மீது  போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றில் விசாரணையில் உள்ளதாகவும் பிணையில் விடுதலை செய்யப்பட்டபோதே இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4