இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு

#Death #Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #SriLanka
Nila
4 years ago
இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூடர் குணசேகர கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான டியூடர் குணசேகர, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 86 ஆவது வயதில் காலமானார்.

1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட டியூடர் குணசேகர, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தில் கம்பஹா மாவட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ருமேனியா, ஹங்கேரி மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த டியூடர் குணசேகர, போலந்து நாட்டிற்கான முதலாவது இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4