இலையுதிர்காலத்தில் சுவிற்சலாந்து பயண தனிமைப்படுத்தலை அறிவி்க்குமா?

இலையுதிர்காலத்தில் சுவிற்சலாந்து பயண தனிமைப்படுத்தலை அறிவி்க்குமா?

இலையுதிர்கால விடுமுறை நாட்களில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பதாக சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் கூறியுள்ளார்.

இலையுதிர்கால விடுமுறை என்ற அடிப்படையில், என்ன தேவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பயண தனிமைப்படுத்தல் இங்கே மீண்டும் ஒரு பங்கை வகிக்கக்கூடும் என்று அமைச்சர் ஞாயிறு வெளியான பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.

அடுத்துவரும் அக்டோபர் மாதத்தில் முக்கிய விடுமுறைகளை சுவிஸ் கன்டோன் பாடசாலைகள் எதிர்கொள்கின்றன.

இதனால் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆயுதம் தடுப்பூசி என்று பெர்செட் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். தடுப்பூசி மையத்திலிருந்து தூரத்தில் உள்ளவர்களைச் சென்றடைய மொபைல் தடுப்பூசி மையங்களை இயக்குமாறு அமைச்சர் கன்டோன்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4