அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் H5N1 வைரஸ்!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் கடல் பறவை ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவான மூன்றாவது மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை மொத்தம் மூன்று மாநிலங்களில் 6 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொய்டர்ஸ் (Reuters) ஊடகத் தகவல்களின்படி, அங்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு கோழிப்பண்ணைகள் மற்றும் முட்டை, கோழி இறைச்சி விநியோகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் அவசர தடுப்பு நடவடிக்கைகள் தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே