ரிஷாத்தின் மனைவி மற்றும் மாமனாரின் பிணை மனு நிராகரிப்பு

#Rishad Bathiudeen #Court Order #Colombo
Prathees
4 years ago
ரிஷாத்தின் மனைவி மற்றும் மாமனாரின் பிணை மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி ஆயிஷா ஷியாப்தீன் மற்றும் அவரது தந்தை முகமது ஷியாப்தீன் ஆகியோரின் பிணை மனு இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

பிரேரணை மூலம் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, கொழும்பு பிரதான நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்களின் பிணை மனுவை நிராகரிப்பதாக நீதவான் அறிவித்தார்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ரஜீந்திர ஜயசூரிய  உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4