மாயமான தரவுகள் குறித்து விசாரணை நடாத்துமாறு சீ.ஐ.டியில் முறைப்பாடு

#SriLanka #Complaint
Prathees
4 years ago
மாயமான தரவுகள் குறித்து விசாரணை நடாத்துமாறு சீ.ஐ.டியில் முறைப்பாடு

தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல் போனமை தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (30) காலை முறைப்பாடு செய்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் தரவுகள் காணாமல் போனது குறித்து விரிவான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவுமே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல்  அதிகாரசபையின் தரவு களஞ்சியத்திலிருந்து சுமார் 11 லட்சம் தரவுகள் காணாமல் போயுள்ளன.

இணையவழியாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவான தரவுகளே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை மூலம் இந்த தரவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும்இ இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இதனுடன் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த தரவுகள் காணாமல் போன சம்பவம் குறித்து, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4