சுவிற்சலாந்தில் பிட்காயின் எவ்வளவு துாரத்தில் உள்ளது?

சுவிற்சலாந்தில் பிட்காயின் எவ்வளவு துாரத்தில் உள்ளது?

இந்த தலைப்புக்கு வருமுன் நாம் பிட்காயின் என்றால் என்ன என்று பார்ப்போம்...

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். சில வங்கிகளில் virtual wallet என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போன்ற ஒன்றே ஆகும்.

பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்களே. ஆனால் தற்போது ஒரு பிட்காயினின் விலை 30000 டாலர்களை தாண்டி நிற்கிறது. இதிலிருந்தே மக்கள் இதனை உலகம் முழுக்க விரும்பி வருகிறார்கள்.

பிட்காயின் இணையத்தில் blockchain போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ஆண்டுக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் “mining” என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது.

புளக்செயின் பெரிய மனித வளம் இன்றி இயங்கவல்லது. அதனாலேயே சுவிஸில் இதனை பெரிதும் ஆதரிக்கிறார்கள். கப்பல் போக்குவரத்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றில் பாரிய தொகையிலான பரிமாற்றங்களை செய்ய முடியும்.

எப்போது நாம் சுவிஸில் இந்த பிட்காயினை பயன்படுத்தி பலசரக்குச்சாமான்கள் வாங்குவோம். என்று கேட்கிறீர்களாயின். தற்போது சுவிஸில் 5000 பேர் இந்த பிட்காயினை பயன்படுத்துகிறார். கமக்செஸ். டிஜிடெக், மற்றும் சில கன்டோன்களில் வரி அறவிடவும் பயன்படுத்துகிறார்கள்.

நாம் எப்படி ஒரு smart phone பாவனைக்கு வந்தோமோ அதே போன்று எதிர்காலத்தில் சுவிற்சாலந்தில் இந்த நடைமுறை நாடு முழுக்க வரலாம்.

சில நாடுகளில் இதனை பாதகமான முறையிலும் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அதில் ஏமாறாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4