உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொரானாவால் மரணம்

#Covid 19 #Covid Variant #Death #Police
Prathees
4 years ago
உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொரானாவால் மரணம்

உதவி பொலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கோவிட் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது. 

கோவிட் தொற்று காரணமாக உதவி பொலிஸ் அதிகாரி குண்டசாலை பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் ஒரேயொருமகன்  சட்டம் பயிலும்  மாணவன் எனவும் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அதிகாரியின் மனைவியும் கடந்த வாரம் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் அதிகாரி பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4