ஊரடங்கு நீடிக்கப்படுமா?

#Colombo #Curfew
Prathees
4 years ago
ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பிலோ நீக்குவது தொடர்பிலோ எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. 

அத்துடன்,  உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கம் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4