பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள்: 20 வருடத்திற்கு முந்தைய நிலை திரும்புகிறதோ?

#Taliban #Afghanistan
Prasu
4 years ago
பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள்: 20 வருடத்திற்கு முந்தைய நிலை திரும்புகிறதோ?

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கபடைகள் நேற்று இரவு முழுவதும் வெளியேறியது. இறுதியாக, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படையினர் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட விமானம் மூலம் வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான்கள் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால் விட்டுச்செல்லப்பட்ட விமானங்களையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை தலிபான்கள் இயக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காந்தகார் மாகாணத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அமெரிக்க பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் தலிபான்களால் இயக்கப்படுவதும் ஹெலிகாப்டரில் மனித உடல் கட்டி தொங்கவிடப்பட்டு இருப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஹெலிகாப்டரில் கட்டி தொங்கவிடப்பட்டது மனித உடலா? அல்லது பொம்மையா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

ஏற்கனவே, தலிபான்கள் அதிகாரத்தை பிடித்த உடனேயே ஆங்காங்கே மக்கள் தாக்கப்பட்டது, போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, பெண் செய்தி தொடர்பாளர் தடுத்து நிறுத்தம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

ஏற்கனவே உலக நாடுகள், ஆப்கானிஸ்தான் மக்களின் தனி உரிமை சுதந்திரம், பெண் உரிமை குறித்து கவலைப்படும் நேரத்தில், இந்த சம்பவம் மீண்டும் 20 வருடத்திற்கு முந்தைய தலிபான் ஆட்சி போன்று நடைபெறுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4