ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் குடும்பச்சண்டைகள் அதிகரிப்பு

#Police #SriLanka #Curfew
Prathees
4 years ago
ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் குடும்பச்சண்டைகள்  அதிகரிப்பு

கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 10 நாட்களில் (ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 31 வரை) குடும்ப தகராறுகள் மற்றும் குடிகாரர்களுக்கிடையேயான மோதல்கள் காரணமாக 150 க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், கணவனால் தாக்கப்பட்ட 30 மனைவிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுதல் மற்றும் தீக்காயங்களால் ஏற்பட்ட  விபத்துக்களால் சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று மருத்துவமனை பே;சசாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4