விமானச் சேவைகள் விருத்தி கண்டுள்ளது.

விமானச் சேவைகள் விருத்தி கண்டுள்ளது.

சுவிற்சலாந்தில் உள்நாட்டு வெளிநாட்டு விமானச்சேவைகள் விருத்தியானது, ஜுன் மாதத்தினை விட ஜுலை மாதம் கூடியதாக உள்ளது, ஆனால் கொவிட்க்கு முன்னதான காலத்தினை விட மிக குறைவாகும். இவ்வாறு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA)  அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பின்னடைவுக்கு காரணம் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொவிட் கட்டுப்பாடுகளாகும்.

வருடாந்திர பயணிகள் கிலோமீட்டர்களில் அளவிடப்பட்ட ஜூலை மாதத்தில் விமானப் பயணத்திற்கான மொத்த தேவை ஜூலை 2019 உடன் ஒப்பிடும்போது 53.1 சதவிகிதம் குறைந்துள்ளது. இது ஜுன் மாத சதவீதம் 60 உடன் ஒப்பிடுகையில் சற்று முன்னேற்றமானதாகும்.

IATA (இயாட்டா) தலைமை இயக்குனர் தெரிவிக்கையில் மக்கள் தமது உள்நாட்டு பயணங்களை இயலுமானவரை செய்தார்கள். சர்வதேச சந்தையில் மீளெழுச்சி தேவையானால் அரசாங்கம் பயணத்துறையில் சுதந்திரத்தை வழங்க வேண்டும். குறைந்தது தடுப்புசி ஏற்றியவர்கள் எந்த கட்டுப்பாடுமின்றி பயணிக்க அனுமதிக்கப்படல் வேண்டும்.

அவர்கள் நீண்ட துாரங்கள் பயணித்து உலகத்தை இணைப்பதுடன் விமானச்சேவையையும் சுற்றுலாத்துறையையும் புத்துயிர் பெற செய்ய வேண்டும். என்றார் அவர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4