பாகிஸ்தானை நோக்கி அகதிகளாக குடிபெயரும் ஆப்கான் மக்கள்!

பாகிஸ்தானை நோக்கி அகதிகளாக குடிபெயரும் ஆப்கான் மக்கள்!

20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

அன்று தொடக்கம் துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலீபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானியர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண்ணீர் வாழ்க்கை, அவர்களுக்கு சொந்தமாகி விட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் அந்த எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுகிறார்களாம். இதற்கு செயற்கைகோள் படங்களை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4