பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

#Covid Vaccine #Covid 19
Keerthi
4 years ago
பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 35ஆயிரத்து 693பேர் பாதிக்கப்பட்டதோடு 207பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 68இலட்சத்து 25ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 742பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 90ஆயிரத்து 224பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 982பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4