இன்று மாலை விளக்கேற்றுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கோரிக்கை

#SriLanka #Corona Virus #Death
Yuga
4 years ago
இன்று மாலை விளக்கேற்றுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கோரிக்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று (03) மாலை வீடுகளில் விளக்கேற்றுமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இணை ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எம். மரிக்கார் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும், மரணித்தவர்களுக்காகவும் பிரார்த்தித்து இன்று மாலை 06. 06 க்கு வீடுகளில் விளக்கேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார ஊழியர்கள், பொலிஸார், முப்படையினர் உள்ளிட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திக்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4