அழுகையை நிறுத்து தோழா

அழுகையை நிறுத்து தோழா
அகிலமே உனது தோழா--- இயற்கையை தொழுது தோழா - எழுந்து வா எனது தோழா
துணிந்து நீ எழுந்தால் உன் தோள் வரை தான்
உலகம்
அடங்கி நீயிருந்தால் - உன் விரல் அளவே வாழ்க்கை அகலம்
கலங்கிய நீராய் இருந்தால் கரைகள்
தொட முடியாது
உறங்கிய விழியை அறுத்தெறிந்தால்
உலகம் உன்னை பழிக்காது
அழுகையை நிறுத்து தோழா
அகிலமே உனது தோழா
இயற்கையை தொழுது தோழா - இன்றே எழுந்து வா - புதிதாய் எழுதுவோம் தோழா
ஆய கலைகள் அனைத்தையும் கற்றறி
மாய வலைகள் விழும் முன்னே சுட்டெரி
தூய தமிழின் வேதத்தை உச்சரி- பெத்த
தாயை நினைத்து எழுந்து துணிந்தடி
கவலைகளோடு கட்டி புரண்டால்
கண்ணீர் தான் விளையும்
முயற்சி கொண்டு முட்டிப் பார்
மூன்றாம் கை தளையும்
வருந்தி படுத்து வாழ்வதாலே- நோய் மட்டுமே
வளரும்
திருந்தி எழுந்து நடந்து பார்__ நூறு விளக்கு எரியும்
அழவாடா பிறந்தாய் என் தோழா-
ஆளப் பிறந்தவன் நீ தோழா
கனவாகி போகலாமா உன் யாத்திரை
கண்ணீரை சுமக்கவா உன் கண்ணில் விழித்திரை
தோற்ற உனக்கெதற்கு ஒரு நித்திரை-
வெற்றி பெற்று குத்தடா ஓர் முத்திரை
என்றும் நன்றியுடன் ஆனந்த சுப பாலா



