இலங்கையில் சுகாதார சேவை இழிவுபடுத்தப்படுகிறதா ? வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

#SriLanka #Covid Vaccine #Hospital
Yuga
4 years ago
 இலங்கையில்  சுகாதார சேவை  இழிவுபடுத்தப்படுகிறதா ? வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

அறிவியல் ரீதியான முறையை மீறி இராணு வத்துக்கு பைசர் தடுப்பூசி வழங்குவது குறித்து அதிருப்தி தெரிவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய்க்கான விஞ்ஞானப் பிரிவின் வைத்திய சாலைக்கும் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் குறைந்த தொகையில் கொரோனா தடுப்பூசி விநோகிக்கப்படுவதாகவும் இராணுவத்துக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்
.
கொரோனா தடுப்பூசி விளையாட்டு அரங்கு மற்றும் வெவ்வேறு இடங்களில் செலுத்துவதை விட வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதே சிறந்தது என்றும் இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக அமைந்துள்ள வைத்தியசாலை அமைப்பின் ஊடாக செயற்பட்டால் வெற்றிகரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார அமைப்பால் நாளாந்தம் 500,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிந்தாலும் தடுப்பூசிகளின் விநியோகம் குறித்த வரம்பைத் தாண்டியுள்ளமையால் மத்திய நிலையங்களில் அதிக நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது என்றும் பொது மக்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இலங்கையின் சுகாதார சேவையை இழிவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளும் குறித்த திட்டம் தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4