ரிஷாட் பதியுதீனுக்கு உதவிய சிறைக் காவலாளி இடமாற்றம்

#SriLanka
Prasu
4 years ago
ரிஷாட் பதியுதீனுக்கு உதவிய சிறைக் காவலாளி இடமாற்றம்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மகசின் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மகசின் சிறையின் பிரதான சிறை அதிகாரி  ரிஷாட்டின் சிறைக் கூடத்திற்கு சென்றபோது அவர் தொலைபேசியை தூக்கியேறிந்தார் என்றும் ஆணையாளர் கூறினார்.

இந்நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைப்பேசியை வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில்  சிறைக்காவலாளி இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலாளி வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4