மலைநாட்டின் பல இடங்களில் கொட்டித் தீர்க்கும் மழை : சாரதிகளின் கவனத்திற்கு!

#SriLanka #weather #Rain #Meteorology #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
மலைநாட்டின் பல இடங்களில் கொட்டித் தீர்க்கும் மழை : சாரதிகளின் கவனத்திற்கு!

சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த மையத்தின் அறிவிப்பின்படி,  மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். 

 மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மற்றும் இரத்தினபுர, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக மத்திய மலைநாட்டின் பாதைகளில் பனிசூழ்ந்து காணப்படுவதாகவும், சாரதிகள் அவதானமாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மோசமான வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4