நியூசிலாந்தில் தாக்குதல் நடாத்திய இலங்கையர் சுட்டுக்கொலை

#Newzealand #Crime #Police #Death
Prathees
4 years ago
நியூசிலாந்தில்  தாக்குதல் நடாத்திய இலங்கையர் சுட்டுக்கொலை

நியுசிலாந்து ஆக்லாண்ட் நகரில் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட  இலங்கை நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு ஆக்லண்ட் நகரான "நிவ்லிண்" பிரதேசத்தில் பல் பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் நடத்தி பொதுமக்களை காயப்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பில் விடுவிக்கப்பட்டிருந்த நபரே பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபரின் தாக்குதலில் 6 பேர் காயமுற்றுள்ளதுடன் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக  கருத்து  அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கருத்து தெரிவிக்கையில், 

இன்று நடந்தது வெறுக்கத்தக்க ஒரு செயல், அது தவறு. இத்தாக்குதல் ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்பட்டது. 

இது ஒரு நம்பிக்கையை, ஒரு கலாச்சாரத்தை, ஒரு இனத்தை பிரதிபலிப்பது அல்ல. ஒரு சமூகத்தில் யாராலும் ஆதரிக்கப்படாத சித்தாந்தத்தால் பீடிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட நபர் தாக்குதலே இது என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், குறித்த நபர் 2016 ஆம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுஇ பின்னர் பொலிஸாரின் கண்காணிப்பில் சமூகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். 

இது பத்திரிகையாளர் சந்திப்பில் அந்நாட்டு பிரதமராலும் பொலிஸ் கமிஷனராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையரின் அடையாளத்தை வெளியிட முடியாது என்றும் குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4