வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்ட அக்காவும் தம்பியும் 

#Death #Covid 19 #Corona Virus
Prathees
4 years ago
வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்ட அக்காவும் தம்பியும் 

பூகொட யகம்பே பகுதியில் உள்ள  வீடொன்றில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  அக்காவும் தம்பியும் என அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

43 வயதான திருமணமாகாத சகோதரியும்  அவரது 38 வயதாக தம்பியுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் இருவரும்  நேற்று  இரவு வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்கு மருந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர்.

இன்று காலை மருந்துப்பொருட்களுடன் உறவினர் ஒருவர்  வீட்டிற்குச் சென்றபோதுஇ ​​அவர்கள் இருவரும் தரையில் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த இரு சடலங்களும்  வாதுபிடிவல ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,  அங்கு விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4