மன்னார் மயானத்திற்கு அருகில் 51 கிலோ  கேரள கஞ்சா மீட்பு 

#Police #Mannar
Prathees
4 years ago
மன்னார் மயானத்திற்கு அருகில் 51 கிலோ  கேரள கஞ்சா மீட்பு 

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை  51 கிலோ 250 கிராம்இ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4