விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு! வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு! வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 7ம் திகதியுடன் முடிவடையும் சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் ஒக்டோபர் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த காலத்திற்கு பொருந்தும் விசா கட்டணம் மட்டுமே இந்த காலத்திற்குள் விசா காலாவதியாகும் மற்றும் அதிகப்படியான அபராதம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அலுவலகப் பணிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் விசா நீடிப்பை பெற்றுக் கொள்ளவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக இவ்வாறு விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  

 

Gallery

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4