தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு பிரஜைக்கு கொரோனா

#SriLanka #Covid 19 #Colombo
Yuga
4 years ago
தெற்கு கடலில் கைதான வெளிநாட்டு பிரஜைக்கு கொரோனா

தெற்கு கடலில் 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

வெளிநாட்டு படகில் கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருளுடன் 4 பாகிஸ்தான் பிரஜைகளும், 3 பலுகிஸ்தான் பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பொலிஸார், கடற்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 1,370 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் குறித்த படகு கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4